தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-02-10 15:46 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அகத்தாகுளம் பகுதியை சேர்ந்தவர், மருதுபாண்டி (வயது22). மில்தொழிலாளி. இவர் கடந்த 21.5.2018 அன்று 17 வயது சிறுமியை கடத்திச்சென்று மானபங்கம் செய்ததாக நரிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர். இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், மில்தொழிலாளி மருதுபாண்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.

மேலும் செய்திகள்