ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் பறிமுதல்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-10 15:40 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்.
 ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின் றனர். தாசில்தார் வானதி, சப்- இன்ஸ்பெக்டர் முத்து கோபால் தலைமையிலான பறக்கும் படையினர் மடவார் வளாகம் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 200  இருந்தது. அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. அவர் அரிசி கடை நடத்தி வருவதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை ஒப்ப டைத்தால் பணத்தை வழங்கி விடுவோம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்