திண்டுக்கல் அருகே குடகனாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திண்டுக்கல் அருகே குடகனாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

Update: 2022-02-10 15:03 GMT

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு மனோஜ் குமார் (18), கோகுல்நாத் (10) என 2 மகன்கள் இருந்தனர். இதில் கோகுல்நாத் கள்ளநாட்டாபட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவன் நேற்று அதே பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் விக்னேஷ் (10) என்ற மாணவனுடன் அந்த பகுதியில் உள்ள குடகனாற்றுக்கு குளிக்க சென்றான். அப்போது கோகுல்நாத் எதிர்பாராதவிதமாக ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் தத்தளித்தான். இதை  பார்த்த விக்னேஷ் காப்பாற்றுங்கள்....காப்பாற்றுங்கள் என கூச்சல் எழுப்பினான். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய கோகுல்நாத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கோகுல்நாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குடகனாற்றில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்