வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் தொடங்கியது
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் தொடங்கியது
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 776 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. வருகிற 19ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அச்சிட்டு தயார்படுத்தப்பட்டன. இந்தநிலையில் சுகாதார பணியாளர்கள்,வருவாய் ஆய்வாளர்கள் 860 பேர் மூலமாக வாக்காளர்களுக்கு வீடுகளுக்கே சென்று பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
வாக்காளர் பெயர், பாகம் எண், வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம் உள்ளிட்ட விவரங்களுடன் பூத் சிலிப் வினியோகம் தொடங்கியுள்ளது. மாநகராட்சி முழுவதும் உள்ள 60 வார்டுகளிலும் இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.