பொள்ளாச்சி வால்பாறையில் தேர்தல் பணி குறித்து 2 ம் கட்ட பயிற்சி

பொள்ளாச்சி,வால்பாறையில் தேர்தல் பணி குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. இதில் அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2022-02-10 13:09 GMT
வால்பாறை

பொள்ளாச்சி,வால்பாறையில் தேர்தல் பணி குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. இதில் அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

2-ம் கட்ட பயிற்சி 

வால்பாறை நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 73 வாக்கு சாவடிகளில் பணிபுரியக்கூடிய வாக்கு சாவடி தலைமை அதிகாரிகள், வாக்கு சாவடி நிலைய அதிகாரிகள் உள்பட 358 பேருக்கு தேர்தல் பணிகள் குறித்த 2-ம் கட்ட பயிற்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் பேசுகையில் வாக்கு சாவடிகளில் பணிபுரியக்கூடிய அதிகாரிகள் அனைவரும் உரிய நேரத்திற்கு வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களர்களுக்கு வாக்களிக்க உரிய நேரத்தில் முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். வாக்கு பதிவின் போது பயன்படுத்துவதற்கு வாக்கு சாவடிகளுக்கு வழங்கப்படும் பொரு
ட்களை முழுமையாக சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும். 

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 

வாக்கு சாவடிகளில் ஏதாவது இடையூறு என்றால் உடனடியாக மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும்.நகராட்சி தேர்தல் அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தப்பட்டு முடிப்பதற்கு வாக்கு சாவடி அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண், மண்டல அலுவலர்கள் கிருஷ்ணன், ராஜ்குமார் பேசினர்.  பயிற்சிக்கு வந்தவர்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதி வாய்ந்தவர்களுக்கு பயிற்சி மையத்திலேயே மருத்துவ குழுவினர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடாசலம், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

ஆனைமலை

இதேபோல் ஆனைமலை தாலுகாவில் உள்ள 5 பேரூராட்சிகளில் கடந்த வாரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சமத்தூர், கோட்டூர் மற்றும் ஒடையகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை அந்தந்த பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமை தாங்கினர். இந்த நிலையில், நேற்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில் 60-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், 3-ம் கட்ட பயிற்சி முகாம் வருகிற 18 ந்தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் அனுப்பப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குபதிவு அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதை தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி தொடங்கி வைத்து பேசினார். மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்து பேசினார்கள். 

மேலும் செய்திகள்