திருப்பூரில் பா ஜனதா பேனர்கள் கிழிப்பு

திருப்பூரில் பா ஜனதா பேனர்கள் கிழிப்பு

Update: 2022-02-10 13:03 GMT
திருப்பூர் மாநகராட்சி 44 வது வார்டு பா.ஜனதா வேட்பாளராக சிவக்குமார் போட்டியிடுகிறார். இந்த வேட்பாளரின் தேர்தல் பணிமனை திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனைக்கு முன்பு பிரதமர் மோடி, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் வேட்பாளர் புகைப்படத்துடன் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த பேனர்களை யாரோ கிழித்து சேதப்படுத்திவிட்டனர்.
நேற்று காலை வேட்பாளர் மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக வேட்பாளர் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்