4பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-02-10 12:05 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
தூத்துக்குடி, முருகேசன் நகர் காட்டுபகுதியில் கடந்த மாதம் 12-ந் தேதி சமீர்வியாஸ் நகரை சேர்ந்த அலெக்ஸ் (வயது 31) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஜெயசீலன் (34) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். இதே போன்று தாளமுத்துநகரை சேர்ந்த ஜெபதுரை மகன் தங்கராஜ் (29), மாப்பிள்ளையூரணியை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஹரிபிரசாத் என்ற பிஸ்டல் என்ற ஹரி (22) ஆகியோரை தாளமுத்துநகர் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். 
போக்சோ சட்டம்
மேலும் தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக புதிய துறைமுகம் சுனாமி காலனியை சேர்ந்த நாகசந்துரு (22) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜெயசீலன், தங்கராஜ், ஹரிபிரசாத் என்ற பிஸ்டல் என்ற ஹரி, நாகசந்துரு ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேர், போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் உட்பட 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்