ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்றவர் கைது
தஞ்சையில் ரெயில்வே அனுமதியின்றி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் ரெயில்வே அனுமதியின்றி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆன்லைனில் முன்பதிவு
தஞ்சையில் ரெயில்வே அனுமதி இன்றி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரகுமார், இசக்கிராஜா, விஜயகுமார் மற்றும் போலீசார் தஞ்சை அருளானந்தம்மாள் நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அருளானந்தம்மாள் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 43) என்பவர் ரெயில்வேயின் உரிய அனுமதியின்றி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பறிமுதல்
மேலும் அவரிடம் இருந்து ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகள் ரூ 5 ஆயிரத்து 533 மதிப்புள்ள 7 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் ரூ 25 ஆயிரத்து 553 மதிப்புள்ள 30 காலாவதியான ஆன்லைன் டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய பயன்படுத்திய கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை போலீசார் தஞ்சை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாபநாசம் கிளை சிறையில் அடைத்தனர்.