கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்ைக
கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்ைக;
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.37 லட்சத்து 61 ஆயிரத்து 541-ம், தங்கம் 40 கிராம், வெள்ளி 210 கிராமும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது. அப்போது கோவில் துணையர் அனிதா, உதவி ஆணையர் கலைவாணன், தக்கார் பிரதிநிதி, ஆய்வாளர், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.