போலீசார் கொடி அணிவகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடையநல்லூர், சுரண்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2022-02-09 21:08 GMT
கடையநல்லூர்:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவுப்படி கடையநல்லூரில் ஆயுதப்படை போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது. புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமை தாங்கினார். கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கிருஷ்ணாபுரம் பஸ்நிலையத்தில் இருந்து தொடங்கி கிருஷ்ணாபுரம், மேற்கு மலம்பாட்டை ரோடு, ரஹ்மானியாபுரம், பேட்டை, மாவடிக்கால், ெரயில்வே பீடர் ரோடு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது. இந்த அணிவகுப்பில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், பலவேசம் மற்றும் சேர்ந்தமரம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி, சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். 

சுரண்டையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் துணை சூப்பிரண்டு பொன்னரசு தலைமை தாங்கினார். பயிற்சி துணை சூப்பிரண்டு நித்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலா, வேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகராட்சி அலுவலகம் முன் தொடங்கி வரகுணராமபுரம், பொட்டல் மாடசாமி கோவில் தெரு, சிவகுருநாதபுரம், அண்ணா நகர், அண்ணா சிலை, கோட்டை தெரு வழியாக சுரண்டை போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், தென்காசி மாவட்ட ஆயுதப்படையினர் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்