கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 48 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்தனர்.;
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெலகாவியில் 327 பேர்
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 705 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 5,339 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 லட்சத்து 12 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 16 ஆயிரத்து 749 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 11 ஆயிரத்து 615 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 60 ஆயிரத்து 956 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.14 ஆக குறைந்துள்ளது. புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 2,161 பேர், பெலகாவியில் 327 பேர், தட்சிண கன்னடாவில் 103 பேர், தார்வாரில் 132 பேர், ஹாசனில் 139 பேர், மைசூருவில் 293 பேர், சிவமொக்காவில் 185 பேர், துமகூருவில் 342 பேர் உள்ளனர்.
சிகிச்சை பெற்று...
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 16 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும், பல்லாரி 4 பேரும், சித்ரதுர்கா, துமகூருவில் தலா 3 பேரும், தார்வார், கோலார், மண்டியா, மைசூரு, சிவமொக்கா, உத்தரகன்னடாவில் தலா 2 பேரும் என மொத்தம் 48 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.