எம்.எல்.ஏ. கார் மீது லாரி மோதல்

கடையநல்லூர் அருகே எம்.எல்.ஏ. கார் மீது லாரி மோதியது. இதில் கார் சேதம் அடைந்தது.

Update: 2022-02-09 20:55 GMT
கடையநல்லூர்:
வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டாக்டர் சதன் திருமலைக்குமார். இவர் மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்காக நேற்று மாலை தனது காரில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்றபோது, பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை இறக்கி விடுவதற்காக நின்று கொண்டிருந்தது. அதற்கு பின்னால் வேறு ஒரு கார் நின்றது. இதனால் எம்.எல்.ஏ. காரை அதன் டிரைவர் நிறுத்தினார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, எம்.எல்.ஏ. காரின் பின்புறத்தில் மோதியது. இதனால் அவரது கார் நகர்ந்து முன்னால் நின்ற மற்றொரு காரின் மீது இடித்தது. இதனால் எம்.எல்.ஏ. காரின் இருபுறமும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் பயணம் செய்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகள்