வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல்

ராஜபாளையத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-02-09 20:09 GMT
ராஜபாளையம்.
ராஜபாளையத்தில் தனி தாசில்தார் ராமநாதன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று புதிய பஸ் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
வாகனத்தை ஓட்டிவந்த திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் நாமக்கல்லுக்கு வெங்காயம் வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாக ஆனந்தராஜ் கூறினார். ஆனால் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தராம்பாளிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்