வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-02-09 20:07 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளுக்கும், குரும்பலூர், அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும், பூலாம்பாடி பேரூராட்சியில் 13 வார்டுகளுக்கும் என மொத்தம் 78 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் 50 வாக்குச் சாவடிகளிலும், குரும்பலூர், அரும்பாவூர் பேரூராட்சிகளில் தலா 15 வாக்குச் சாவடிகளிலும், பூலாம்பாடி பேரூராட்சியில் 13 வாக்குச் சாவடிகளிலும், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 17 வாக்குச் சாவடிகளிலும் என மொத்தம் 110 வாக்குச் சாவடிகளில் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்குச்சாவடிகளில் இருந்து பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து `சீல்' வைக்கப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது. இங்கு, வருகிற 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
 இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரத்னா, கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், வாக்கு எண்ணும் பகுதியில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மற்றும் அலுவலர்கள் தனித்தனியாக செல்வதற்கான வழிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டனர். மேலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படவுள்ள காப்பு அறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்வதற்கான பாதைகள், வாக்கு எண்ணும் அறையில் முகவர்கள் நிற்பதற்கான பகுதி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்