குமரிக்கு வருகிற 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்

குமரிக்கு வருகிற 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை

Update: 2022-02-09 20:05 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி, வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படாது. இந்த விடுமுறை நாளுக்கு ஈடாக வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
விடுமுறை நாளான 16-ந் தேதி தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்களில் அரசு சார்ந்த அவசர பணிகள் மேற்கொள்ள தேவையான பணியாளர்கள் கொண்டு செயல்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்