நாகர்கோவில்,
திற்பரப்பு அருகே உள்ள நக்கீரன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 35). இவர் மீது குலசேகரம் போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஜெகன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்று ஜெகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து குலசேகரம் போலீசார் நேற்று ஜெகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.