ரூ.1 கோடியே 16 லட்சம் மோசடி; 5 பேர் மீது வழக்கு
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யக்கோரி ரூ.1 கோடியே 16 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி, பிப்.10-
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யக்கோரி ரூ.1 கோடியே 16 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனியார் நிறுவனத்தில் முதலீடு
திருச்சி வயலூர்ரோடு பகுதியை சேர்ந்தவர் மெர்வின் கிறிஸ்டோபர் (வயது 28). இவர் தில்லைநகர் 11-வது கிராசிங்கில் இ- மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் கணினி மென்பொருள் மூலம் 3 விதங்களில் வேலைகளை செய்து கொடுப்பதாகவும், இதில் முதலீடு செய்தால் முதிர்வு காலத்திற்கு பிறகு நல்ல லாபம்சம்பாதிக்கலாம் என சென்னை பம்மல் முத்தமிழ்நகரை சேர்ந்த அரவிந்த் (26) என்பவர் உள்பட பலரிடம் மெர்வின் கிறிஸ்டோபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பி கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை அரவிந்த் மற்றும் 108 பேர் தலா ரூ.30 ஆயிரம் வீதம் அந்த நிறுவனத்தில்முதலீடுசெய்துள்ளனர்.
ரூ.1 கோடியே 16 லட்சம் மோசடி
இதனைத் தொடர்ந்து அரவிந்த் ரூ.47 லட்சமும், மற்றநபர்கள் ரூ.69 லட்சத்து 43 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.1 கோடியே 16 லட்சத்து 43 ஆயிரத்து 500-ஐ பல்வேறு தேதிகளில் நேரடியாகவும், வங்கி மூலமாகவும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதிர்வு காலத்திற்கு பிறகும் பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் தான் உள்பட பலர் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரவிந்த், இது தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி மெர்வின் கிறிஸ்டோபர், அவரது தந்தை மைக்கேல் சேவியர்ராஜ், தாய் மேரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மெர்வின் கிறிஸ்டோபரை கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதிஒருவழக்கில்தில்லைநகர் போலீசார் ஏற்கனவே கைதுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.