செங்கம் அருகே மின்வாரிய அலுவலகம் முற்றுகை

செங்கம் அருகே மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-02-09 18:27 GMT
செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரியமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக மின் வினியோகம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் மின்மாற்றியை சரியாக பராமரிப்பு செய்யவில்லை என மேல்கரியமங்கலம் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதனால் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுவதால் விவசாய பணிகள் பாதிப்பதாக கூறி கரியமங்கலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை மேல்கரியமங்கலம் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். 

அதிகாரிகள், முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்