ராணிப்பேட்டையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ராணிப்பேட்டையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நில எடுப்பு) முனுசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.