ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு திருப்புதல் தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு திருப்புதல் தேர்வு நடந்தது.

Update: 2022-02-09 18:09 GMT
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை பொதுத்தேர்வைபோல் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 223 பள்ளிக்கூடங்களில் 28 ஆயிரத்து 438 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.யும், 25 ஆயிரத்து 70 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 வும் படித்து வருகின்றனர். இந்த மாணவ-மாணவிகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு நேற்று நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு தேர்வை எழுதினார்கள். இன்று (வியாழக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதனால் இன்று நடைபெற இருந்த ஆங்கில தேர்வு வருகிற 17-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்