அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.4¾ லட்சம் பறிமுதல்
சின்னசேலத்தில் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.4¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;
சின்னசேலம்,
சின்னசேலம் கூகையூர் பஸ் நிறுத்தத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மஞ்சமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரது வாகனத்தில் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் இருந்தது. ஆனால் அதை மொபட்டில் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சின்னசேலம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் சங்கராபுரத்தில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உரிய ஆவணமின்றி மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற ரூ.68 ஆயிரத்து 970 பறிமுதல் செய்யப்பட்டது.