பாலியல் வழக்கில் வருகிற 15 ந் தேதி பெண் ஐ பி எஸ் அதிகாரியிடம் கட்டாயம் குறுக்கு விசாரணை முன்னாள் டி ஜி பி தரப்புக்கு விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

பாலியல் வழக்கில் வருகிற 15 ந் தேதி பெண் ஐ பி எஸ் அதிகாரியிடம் கட்டாயம் குறுக்கு விசாரணை முன்னாள் டி ஜி பி தரப்புக்கு விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

Update: 2022-02-09 18:02 GMT
விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு மீதான நேரடி விசாரணை நேற்று மீண்டும் தொடங்கியது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. 

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணையை தொடரலாம் என்று நீதிபதி கோபிநாதன் கூறினார். அதற்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரன், எங்கள் தரப்பின் மூத்த வக்கீல் தினகரன் உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்றும் எனவே நாங்கள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குறுக்கு விசாரணையை தொடர கால அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டு அதற்கான மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாதன், வழக்கு விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு கட்டாயம் குறுக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்