தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் நத்தமேடு சின்ன தெரு பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் மகன் லட்சுமணன் (வயது 39). ரவுடியான இவர் மீது விழுப்புரம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக லட்சுமணனை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவருடைய குற்ற செயல்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் லட்சுமணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.