சிறுத்தையை பிடிக்க கூண்டு

சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது

Update: 2022-02-09 17:39 GMT
சத்தியமங்கலம் அடுத்துள்ளது புளியங்கோம்பை கிராமம். மலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தை ஒன்று வேட்டையாடி வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் அங்கு கூண்டு வைத்துள்ளனர். அதற்குள் ஒரு ஆட்டுக்குட்டியையும் கட்டி வைத்துள்ளார்கள். அந்த கூண்டை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்