ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

Update: 2022-02-09 17:31 GMT
ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் தொற்று பரவுவதை தடுக்கவும் பொதுமக்களுக்கு 2 தவணை தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருந்தாலும் 3-வது அலை வேகமாக பரவியதாலும், ஒமைக்ரான் தொற்று காணப்பட்டதாலும் முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
11 ஆயிரம் பேர்
தமிழகத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 24 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்கள். அவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
வாரந்தோறும் வியாழக்கிழமை இதற்கான முகாம் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்டமாக நடந்த முகாமில் 11 ஆயிரத்து 46 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்