கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் அண்ணன் தம்பி கைது
கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஜவளகிரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கர்நாடக மாநிலம், கனகபுரா கொலகாண்டஹள்ளி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 30), அவரது தம்பி சூர்யா (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.