வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பயிற்சி
நீடாமங்கலத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பயிற்சி நடந்தது.
நீடாமங்கலம்:
தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரியின் முதல்வர் வேலாயுதம் மற்றும் இணை பேராசிரியர் ஆனந்தராஜா ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரிலும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் சாகுபடி நடைமுறைகளை கண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பருத்திக்கோட்டை கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலத்தில் பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். நெல் எந்திர பயிர் நடவிற்காக இந்த மாதிரியான பாய்நாற்றங்கால் தயாரிக்கப்படுகிறது.