போலீசார் கொடி அணிவகுப்பு

போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

Update: 2022-02-09 17:15 GMT
காரைக்குடி, 
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் குறித்த பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று போலீசார் சார்பில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும், பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்வலம் தேவகோட்டை ராம்நகரில் இருந்து தொடங்கி ஆண்டவர் செட், அண்ணாசாலை, தேவகோட்டை நகராட்சி வழியாக வந்து தியாகிகள் பூங்காவில் நிறைவு பெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்