பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் தீர்ப்புக்கு தடை

பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் தீர்ப்புக்கு தடை

Update: 2022-02-09 17:15 GMT
பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் தீர்ப்புக்கு தடை
கோவை

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனத்தினர், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் வட்டி தருவதாக தெரிவித்தனர். அதை நம்பி ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 


அவர்கள், ஆயிரக்கணக்கானவர்களிடம் முதலீடு பெற்று ரூ.870 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் நிதி நிறுவன உரிமையாளர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 


இதில் உடல்நலக்குறைவு காரணமாக கதிரவன் இறந்தார். பாசி மோசடி வழக்கு கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டேன்பிட்) நடந்து வந்தது. நீதிபதி ரவி, வழக்கின் அனைத்து விசாரணையும் முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்படும் நிலையில் இருந்தது.

இந்தநிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஐகோர்ட்டில் தீர்ப்புக்கு தடை கோரி மனுதாக்கல் செய்தனர். ஐகோர்ட்டில் நடை பெற்ற விசாரணையை தொடர்ந்து பாசி வழக்கில் அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி வரை கீழ்கோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கப் பட்டது. 

இந்த உத்தரவு நகலை, எதிர்தரப்பு வக்கீல் கோவை டேன்பிட் கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதைத்தொடர்ந்து கோவை கோர்ட்டின் விசாரணையை ஏப்ரல் மாதம் 1-ந் தேதிக்கு நீதிபதி ரவி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்