தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும்

குடவாசல் பேரூராட்சியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Update: 2022-02-09 17:06 GMT
குடவாசல்:
குடவாசல் பேரூராட்சியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.  
அறிமுக கூட்டம் 
குடவாசல் பேரூராட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 52 புதுக்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிராமன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடவாசல் நகர தி.மு.க. செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி  நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு வேளாண்மை பெருக்கத்திற்கான வழிமுறைகளை முதல்-அமைச்சர் செய்து வருகிறார். 
அனைவரும் உழைக்க வேண்டும்
வருகிற 19-ந்தேதி நடைபெறும் குடவாசல் பேரூராட்சி தேர்தலில் தி.மு.க.கூட்டணி சார்பில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை அனைத்து வேட்பாளர்களும் மக்களிடம் எடுத்துச்சென்று வாக்கு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய நிர்வாகி தமிழ்க்கதிர் நன்றி கூறினார்.
கொரடாச்ே்சரி 
இதேபோல் கொரடாச்சேரி பேரூராட்சியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். 
---

மேலும் செய்திகள்