வேதாரண்யம்:-
வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன் மகாதேவியில் தென்னையை தாக்கும் ரூக்கோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கான முகாமிற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா பேசுகையில், ‘வேதாரண்யம் பகுதியில் நாலுவேதபதி, வெள்ளப்பள்ளம், கோவில்பத்து, கள்ளிமேடு ஆகிய இடங்களில் தென்னை மரங்களில் ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைக்கலாம்’ என்றார். முகாமில் வேளாண் அலுவலர் வேதரத்தினம், விதை அலுவலர்கள் ரவி, ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.