வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்:

வாக்குப்பதிவு எந்திரங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விசாகன் தலைமையில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 747 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக 3 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,500 கட்டுப்பாட்டு கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
‘சீல்’ வைப்பு
இந்த கருவிகள் அனைத்தும் முறையாக செயல்படுகிறதா? என்று கலெக்டர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி உள்பட 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் 894 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 894 கட்டுப்பாட்டு கருவிகள் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அந்த கருவிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தனி அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளில் சின்னங்கள் பொருத்தப்பட்டு தேர்தல் நடக்கும் நாளுக்கு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.