போலீசாரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

ரோந்து சென்ற போலீசாரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-09 16:40 GMT
பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள மந்தி வலசை பகுதியில் தொடர் மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனால் பரமக்குடி தாலுகா போலீசார் அந்த பகுதியில் தினமும் இரவு நேரங் களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாணிக் கம் சாதாரண உடையில் ரோந்து பணிக்கு சென்றார். அப் போது அந்த பகுதியில் இருந்து திடீரென வந்த 3 பேர் கத்தி, வாள் ஆகியவற்றை காட்டி போலீசார் என தெரியாமல் அவரை மறித்துள்ளனர். பின்பு அவரிடம் எவ்வளவு பணம் வைக்கிறாய் கொடுத்துவிடு இல்லையேல் உன்னைக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதைப் பார்த்ததும் பின் தொடர்ந்து வந்த போலீசார் அந்த மூன்று நபர்களையும் சுற்றி வளைத்தனர். பின்பு அவர்களை பிடித்து தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கள்ளியடி யேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்பாபு (வயது29), தினகரன் (34),அக்கிரமேசி கிரா மத்தைச் சேர்ந்த சேதுபதி (22) என தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்