சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசிமக திருவிழா
சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசிமக திருவிழா
திட்டச்சேரி:-
திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 21-ந் தேதி வரை நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியில் கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும், 16-ந் தேதி திருமலைராஜன் பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 21-ந் தேதி இரவு 10 மணிக்கு திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.