வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-02-09 15:45 GMT
தொண்டி, 
தொண்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பேரூராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் தாசில்தார் செந்தில்வேல் முருகன், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் சேக்ரட்நாத் ஆகியோர் உடன்ருந்தனர். அதனை தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்