இலங்கை சிறையில் விடுதலையான 56 பேரில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.9 மீனவர்கள் இன்று தமிழகம் வருகிறார்கள்.

9 மீனவர்கள் இன்று தமிழகம் வருகிறார்கள்.

Update: 2022-02-09 15:22 GMT
ராமேசுவரம், 
ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 9 படகுகள் மற்றும் அதில் இருந்த 56 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். 
பின்னர் 56 மீனவர்களும் கடந்த மாதம் 25-ந் தேதி, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்களுக்கு தொற்று உறுதியானதால் அவர்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 56 பேருக்கும் நேற்றுமுன்தினம் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 மீனவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அந்த 4 பேரும் மீண்டும் சிகிச்சைக்காக இந்திய துணை தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 
இதனிடையே மற்ற மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும்  இன்று (வியாழக்கிழமை) விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள் .இதில் 6 பேர் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள், மற்ற 3 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
------------------

மேலும் செய்திகள்