பிரதமரின் தொழிற்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

பிரதமரின் தொழிற்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

Update: 2022-02-09 12:55 GMT
பிரதமரின் தொழிற்கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கும் முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. நடப்பு கல்வியாண்டில் முன்னாள் படை வீரர்களின் சிறார்களை பிரதமரின் தொழிற்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஊக்கப்படுத்தி அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கும் வகையில் வருகிற 28ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421 2971127 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்