மடத்துக்குளம் பெரிய வட்டாரம் பகுதியில் மிகவும் பாழடைந்து உள்ள சமுதாய நல கூட கட்டிடத்தை இடித்துஅப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாழடைந்த கட்டிடம்
மடத்துக்குளம் பெரிய வட்டாரம் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் பயன்பாட்டுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. தொடர்ந்து பல ஆண் டுகள் பயன்பாட்டில் இருந்த சமுதாய நலக்கூடம் கலந்த 10 ஆ ண்டுகளுக்கு முன்பு இருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
அதன்பின்னர் பராமரிப்பின்றி கிடந்த இந்த வளாகம் முழுவதும் புதர்கள் நிறைந்து வளர்ந்தது.விஷப்பூச்சிகள் தங்கும் பகுதியாக மாறியது. தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட் டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது.
இடிக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது
சமுதாய நலக் கூடத்தில் மேற்கூரை முழுவதும் உறுதி இழந்துவிட்டது. சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரையின் பல இடங்களில் விரிசல் ஏற்ட்டுள்ள து. வீடுகளுக்கு அருகில் உள்ளதால் சிறுவர்கள் இங்கு விளையாட செல் வது உண்டு. இது தவிர சுற்றுச்சுவர் இடிந்து உள்ளதால் இந்த வழியாக வாய்க்காலுக்கு பலர் சென்று திரும்புகின்றனர். கட்டிடம் இடிந்து பலர் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பாழடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.