துணை தாசில்தார் மீதும் வழக்குப்பதிவு

துணை தாசில்தார் மீதும் வழக்குப்பதிவு

Update: 2022-02-09 04:23 GMT
துணை தாசில்தார் மீதும் வழக்குப்பதிவு
கோவை

கோவை அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் வாங்குவதற்காக வடக்கு தாலுகா அலுவலகத்தை அணுகினார். தாசில்தார் ரூ.15 ஆயிரமும், துணை தாசில்தார் ரூ.10 ஆயிரமும் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் துணை தாசில்தார் செல்வம், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 4-ந்தேதி பணிக்கு வரவில்லை. 

அப்போது தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கோகிலா மணி இருந்தார். ஏற்கனவே லஞ்சம் கேட்பது குறித்து சின்னராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்து இருந்தார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைவாக நின்று கண்காணித்தனர். தாசில்தார் கோகிலாமணி லஞ்சப்பணத்தை வாங்கும்போது கையும், களவுமாக பிடிபட்டார். கைதான கோகிலாமணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், சின்னராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். சொத்துமதிப்பு சான்றிதழ் வழங்க துணை தாசில்தார் செல்வம், ரூ.10 ஆயிரம் கேட்டு வற்புறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதால், துணை தாசில்தார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்