ஒரே நாளில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் ஒரே நாளில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-02-08 21:28 GMT
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் அருகே உள்ள கடியபட்டினம் குழந்தை இயேசு தெருவை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை. இவருடைய மகன் வில்பிரட் பிரபு (வயது 39). இவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். 

இதை கலெக்டர் ஏற்று வில்பிரட்பிரபுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் வில்பிரட் பிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறையில் ஒப்படைத்தனர்.

நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர் என்ற குட்டசங்கர் (24), ரெட்டியார்பட்டி ராமேஷ்வரன் (28) ஆகிய இருவரும் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் நாங்குநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோர் கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தனர். அதை கலெக்டர் ஏற்று சங்கர், ராமேஷ்வரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

இதன்பேரில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.


மேலும் செய்திகள்