வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை அருகே வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-08 21:20 GMT
நெல்லை:
நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி, பறக்கும் படை தாசில்தார் சங்கர் மற்றும் நெல்லை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மனோகரன் மற்றும் போலீசார் நேற்று நெல்லை அருகே உள்ள தாழையூத்து ராம்நகரில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு வீட்டில் 7 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த ரேஷன் அரிசியையும், வேனையும் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக தாழையூத்தை சேர்ந்த கலைஞர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.





மேலும் செய்திகள்