கோபியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி
கோபியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடத்தூர்
கோபியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஓட்டு வேட்டை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 22-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். இதையொட்டி வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளிலும், வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் படுத்தும் பணியிலும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 145 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.
வலை அமைக்கும் பணி
கோபி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி கூடத்தில் உள்ள ஒரு அறையில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தடுப்பு வலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் லக்கம்பட்டி, எலத்தூர், காசிபாளையம், நம்பியூர், கொளப்பலூர், கூகலூர், ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அங்கும் தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.