நூற்பாலையில் தீவிபத்து- பெரும் சேதம் தவிர்ப்பு

கோபி அருகே நூற்பாலையில் தீப்பிடித்தது. இதில் ெபரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2022-02-08 21:15 GMT
கடத்தூர்
கோபி அருகே நூற்பாலையில் தீப்பிடித்தது. இதில் ெபரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 
நூற்பாலை
கோபி  யூனிட் நகரில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். அப்போது நூற்பாலையின் மேற்கூரையில் திடீரென புகை வந்தது. சில நொடிகளில் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மின்கசிவு
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேற்கூரையில் பற்றி எரிந்த தீயை அணைத்ததார்கள். 
தீப்பற்றியதும் தொழிலாளர்கள் அங்கிருந்த நூல் பண்டல்களை வெளியே கொண்டு சென்றுவிட்டார்கள். அதனால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. 
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தார்கள். 
மேலும் இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்