மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 399 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 13 ஆயிரத்து 897 சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்கு
248 பேர் பலியாகி உள்ளனர். பெரம்பலூர் நகரில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. பெரம்பலூர் ஒன்றியதில் 7 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 4 பேர், வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களில் தலா ஒருவர் என மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 254 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 227 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 27 பேர் திருச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.