பேரணாம்பட்டு அருகே ஆட்டோ மீது பஸ் மோதி டிரைவர் பலி
பேரணாம்பட்டு அருகே பஸ்- ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32) ஷேர்ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு ரங்கம்பேட்டையில் இருந்து பேர்ணாம்பட்டு நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பங்களாமேடு பகுதியில் சென்றபோது பேரணாம்பட்டில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், ஆட்டோவும் மோதிக்கொண்டன.
இதில் ஆட்டோ சேதமடைந்து ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் படு காயமடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தேவ பிரசாத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.