வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ராமகோவிந்தன் காட்டை சேர்ந்தவர் மோகன். இவருடைய விவசாய வயலில் நேற்று 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு பிடிபட்டது. இது குறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கானுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர் பாண்டியன் பாம்பை மீட்டு கோடியக்காடு வனப்பகுதியில் விட்டார்.