நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சுரேஷ்கண்ணா, டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைச்செயலாளர் கோவிந்தராஜ், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அகவிலைப்படி
தமிழக அரசு பணியாளர்களுக்கு வழங்கும் 31 சதவீத அகவிலைப்படியை கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.