சாராயம் விற்றவர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே காக்கழனி பகுதியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காக்கழனி தோப்பு தெருவில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் தங்கபாண்டியன் (வயது27) என்பதும், இவர் காரைக்கால், வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது குறித்து கீழ்வேளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.