முதியவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதில் பிரச்சினை

முதியவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதில் பிரச்சினை

Update: 2022-02-08 17:44 GMT
காரைக்குடி, 
காரைக்குடி அருகே உள்ள தட்டாகுடி கிராமத்தில் சண்முகம் (வயது 65) என்பவர் இறந்துவிட்டார். அதே ஊரை சேர்ந்த தனியார் ஒருவரின் பட்டா நிலத்தில் உள்ள வாய்க்கால் பாதையில் உடலை கொண்டு செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் போது பிரச்சினை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறினர். 
சண்முகத்தின் உடலை கொண்டு செல்வது தொடர்பாகவும் பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் அங்கு சென்று அரசு இடத்தில் பாதையை ஏற்படுத்தி மயானத்திற்கு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார். அதன்பின் மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின் தாசில்தார் மாணிக்கவாசகம் ஊராட்சி தலைவரிடம் கூறி அரசு‌ இடத்தில் உடனடியாக சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். 

மேலும் செய்திகள்