108 திருவிளக்கு பூஜை
நாகூரில் சுரிமாரியம்மன் கோவிலில் தை மாதத்தையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.;
நாகூர்:
நாகூரில் சுரிமாரியம்மன் கோவிலில் தை மாதத்தையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், தயிர் பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.